மருத்துவ சேர்க்கை .. இன்று முதல் தொடங்கும் கலந்தாய்வு.. இரண்டாவது சுற்று எப்போது?
Medical Counselling | 2024 – 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்டு 8 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்திருந்தது. அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ கலந்தாய்வு : மருத்துவ படிப்பில் சேறுவதற்கான அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தேதிகள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று தொடங்கும் மருத்துவ கலந்தாய்வுக்கான முதல் சுற்று வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் மாநில இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் ஆக்ஸ்ட் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Actor Cheran: நடுரோட்டில் சண்டைபோட்ட சேரன்.. காதை கிழித்த ஹார்ன் சவுண்ட்டால் வாக்குவாதம்!
மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு
இதேபோல அகில இந்திய இடங்களுக்கான இரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வு வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அகில இந்திய இடங்களுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 1 முதல் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும்
மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு வருகின்ற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை முடிந்து வரும் அக்டோபர் 1 ஆம் தேதி, 2024 – 25 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிபிஐ-க்கு மாற்றப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு.. நாடு முழுவது மருத்துவர்கள் தொடர் போராட்டம்!
தரவரிசை பட்டியல் :
2024 – 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்டு 8 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்திருந்தது. அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதியும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதியும் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2 வது வாரத்தில் தரவரிசைப்பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.