UGC NET Exam Results: வெளியானது யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்.. பார்ப்பது எப்படி?

யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 21 முதல் 30ஆம் தேதி வரையும், செப்டம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரையும் நெட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், இதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

UGC NET Exam Results: வெளியானது யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்.. பார்ப்பது எப்படி?

மாணவர்கள் (picture credit: Getty)

Updated On: 

17 Oct 2024 21:50 PM

யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர நெட் தேர்வு எனும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதேபோல, இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகையை பெற நெட் தேர்வு கட்டாயம் ஆகும். மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணிணி மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தகுதித் தேர்வு ஜூன் மற்றும டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

வெளியானது நெட் தேர்வு முடிவுகள்

நடப்பாண்டுக்கான நேரடி எழுத்துத்தேர்வு முறை கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் 317 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,205 தேர்வு மையங்களில் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிந்த காரணமாக கடந்த 18ஆம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

Also Read: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.. இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..

நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது.  ஆகஸ்ட் 21 முதல் 30ஆம் தேதி வரையும், செப்டம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரையும் நெட் தேர்வு நடத்தப்பட்டது.

National Testing Agency has announced the UGC NET 2024 June exam result. Along with the result, the testing agency has also released the subject-wise cut-offs. pic.twitter.com/zpIGT2i5FC

இந்த தேர்வு 2 ஷிப்டுகளில் நடைபெற்றது. காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை மற்றும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடந்தது. இந்த தேர்வை 6,84,224 பேர் எழுதினர். இந்த நிலையில், இதற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: ரெட் அலர்ட்.. சென்னை உட்பட 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

தேர்வர்கள் https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தை முதலில் க்ளிக் செய்யவும். முகப்பு பக்கத்தில் தேர்வு UGC NET Exam Results 2024 என்ற இணையப்பை க்ளிக் செய்து தேர்வர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த நாள் ஆகிய தகவல்ளை உள்ளீட வேண்டும் பின்னர், உங்களது தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளலாம். மேலும், முடிவுகளை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!