5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

NCERT: குறையும் பாடப்புத்தகம் விலை.. NCERT அறிவிப்பால் மாணவர்கள் நிம்மதி!

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது மூலம் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் கிடைப்பதை மேம்படுத்தி, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் வீட்டு வாசலுக்கே இனி அவை வரும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

NCERT: குறையும் பாடப்புத்தகம் விலை.. NCERT அறிவிப்பால் மாணவர்கள் நிம்மதி!
NCERT நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Dec 2024 22:52 PM

வரும் கல்வியாண்டு முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலையில் 20 சதவீதம் குறைக்கப்படும் என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான (NCERT) அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் தலைமையகத்தில் அரங்கம் கட்டுவதற்கான ‘பூமி பூஜை’ நிகழ்ச்சிஇன்று நடைபெற்றது. இதில் பேசிய அதன் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறும்போது, “பாடப்புத்தகங்களின் விலை கணிசமாகக் குறைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த ஆண்டு, NCERT காகிதக் கொள்முதல் மற்றும் சமீபத்திய அச்சு இயந்திரங்களைக் கொண்ட அச்சுப்பொறிகளில் அதிக செயல்திறனைக் கொண்டு வந்துள்ளது. அதனால் அடுத்த கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடப்புத்தகங்களும் தற்போதுள்ளதை விட 20 சதவீதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Also Read: சம்பவம் கன்பாஃர்ம்.. நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. பா.ஜ.க க்ரீன் சிக்னல்!

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் ஒரு பிரதி ரூ.65க்கு விற்பனை செய்யப்படும் என்றும் சுமார் 300 தலைப்புகளில் ஐந்து கோடி பாடப்புத்தகங்களை அச்சிடப்படுகிறது. இது சமீபத்தில் அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்களுடனான கூட்டணி மூலம் அதன் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. இதனால் உண்மையான பாடப்புத்தகங்களை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எளிதாக பெற முடியும்.

இதற்கிடையில் இந்நிகழ்ச்சியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மற்றும் ஃபிளிப்கார்ட் இடையே NCERT பாடப்புத்தகங்களை டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் விரிவுபடுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது மூலம் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் கிடைப்பதை மேம்படுத்தி, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் வீட்டு வாசலுக்கே இனி அவை வரும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

Also Read: Year Ender 2024: 2024ல் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட உணவுகள் எது தெரியுமா?

மேலும் NISTHA ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சித் தொகுதிகள், NISSHTHA-ET, Kaushal மற்றும் Edu-Leader ஆகியவற்றை வெளியிட்ட அவர், Google India வழங்கும் NISSHTHA ஆசிரியர்களுக்கான பயிற்சித் தொகுதிகள் மற்றும் அனுபவக் கற்றல் மையம் போன்ற முயற்சிகள் ஆசிரியர்களின் திறனை வலுப்படுத்தும் மற்றும் இரு கல்வியாளர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் என்று தெரிவித்தார்.

என்சிஇஆர்டி என்பது பாரதத்தின் பெருமை என்றும், நாட்டின் கல்வி முறையின் மூலக்கல் என்றும் கூறிய தர்மேந்திர பிரதான், இது ஒரு நிறுவனம் மட்டுமல்ல, நாட்டிற்கான கூட்டுக் கல்விக் களஞ்சியம் என்றும் விவரித்தார்.

NCERT ஒரு ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாறும்போது, ​​அதன்கீழ் உள்ளடக்க மேம்பாடு, பாடத்திட்ட வடிவமைப்பு, கற்பித்தல் அணுகுமுறைகள், புதுமையான கல்வி நடைமுறைகள், ஆசிரியர் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உட்செலுத்துதல் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Latest News