NEET: நீட் மறுதேர்வுக்கு உத்தரவிடுமா உச்ச நீதிமன்றம்? பாயிண்டை பிடித்த தலைமை நீதிபதி! - Tamil News | | TV9 Tamil

NEET: நீட் மறுதேர்வுக்கு உத்தரவிடுமா உச்ச நீதிமன்றம்? பாயிண்டை பிடித்த தலைமை நீதிபதி!

Updated On: 

08 Jul 2024 17:24 PM

நீட் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 38 மனுக்கள் மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி, " நீட் வினாத்தாள் கசிந்ததை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் 23 லட்சம் மாணவர்களை நாங்கள் கையாள்வதால் எந்த அளவுக்கு வினாத்தாள் கசிந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டும்” என்றார்.

NEET: நீட் மறுதேர்வுக்கு உத்தரவிடுமா உச்ச நீதிமன்றம்? பாயிண்டை பிடித்த தலைமை நீதிபதி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்

Follow Us On

உச்ச நீதிமன்றம்:  நீட் முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 38 மனுக்கள் மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி, ” நீட் வினாத்தாள் கசிந்ததை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் 23 லட்சம் மாணவர்களை நாங்கள் கையாள்வதால் எந்த அளவுக்கு வினாத்தாள் கசிந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டும். பெரிய அளவில் கசியவில்லை என்றால் தேர்வை ரத்து செய்ய மாட்டோம். பயனடைந்தவர்கள், தவறிழைத்தவர்கள் கண்டறியாவிட்டால் நிச்சயம் மறுதேர்வு நடத்த வேண்டும்” என்றார். மேலும், மாணவர்கள் மீண்டும் பயணம் செய்ய வேண்டும். எனவே, நீட் வினாத்தாள் எப்போது தயாரிக்கப்படுகிறது? எப்போது அச்சிடப்படுகிறது?

மையங்களுக்கு அனுப்புவது எப்போது? வினாத்தாள் எந்தளவுக்கு கசிந்தது? கசிவு எப்படி நடந்தது? தவறு செய்த மாணவர்களை அடையாள காண மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் எடுத்த நடவடிக்கை என்ன? போன்ற விவரங்களை தேதி வாரியாக வழங்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.  மேலும், நீட் தேர்வு அதன் புனிதத் தன்மையை இழந்துள்ளது.

Also Read: இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

நீட் வினாத்தாள் கசிவால் பயனடைந்த மாணவர்களை அடையாளம் காணவும், கசிவு நடந்த மையங்கள்/நகரங்களை அடையாளம் காணவும் உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ, என்டிஏ ஜூலை 10ஆம் தேதிக்குள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக பீகாரில் வினாத்தாள் கசிந்நதாக சில்ர் கைதாகினர். அதேபோல, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது வழக்கத்திற்கு மாறாக 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றதும் பெரும் சந்தேகத்தை கிளப்பியது.

மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால், அதிருப்தி அடைந்த மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மறுதேர்வு கோரியும் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பான ஏராளமான மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதே சமயத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறையா? உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version