5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

NEET PG Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!

ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

NEET PG Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!
மாணவர்கள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Jul 2024 09:30 AM

ஆகஸ்ட் 11ல் முதுநிலை நீட் தேர்வு: ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்கள் எம்.டி, எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுநிலை தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்கள், மத்திய அரசு கல்லி நிறவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ படிப்புகளுக்கு மொத்தம் 42,500 இடங்கள் உள்ளன.

Also Read:  யுஜிசி நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு.. புதிய அட்டவணை வெளியிட்ட என்டிஏ!

அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தேர்வுக்கு 12 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாற்றம், கருணை மதிப்பெண் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

மற்ற தேர்வுகள் எப்போது?

இந்த நிலையில், நீட் முதுகலை தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் எனவும் இரண்டு ஷிப்ட்களில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, யுஜிசி நெட் தேர்வுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நெட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை கணினி மூலம் நடைபெறும எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சிஐஎஸ்ஆர் யுஜிசி நெட் தேர்வு ஜூலை 245 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்சிஈடி தேர்வு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. மேலும், அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு திட்டமிட்டப்படி ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என புதிய கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கருணை மதிப்பெண் விவகாரம்.. நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு..

Latest News