NEET UG Counselling: இளநிலை மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு.. காரணம் என்ன?
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் முறைகேடு பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் ஜூன் 6ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவ்லகள் வெளியாகி உள்ளன. கலந்தாய்வுக்கான மறுதேதி பிறகு வெளியிடப்படும் என கூறப்படுகிறது
கலந்தாய்வு ஒத்திவைப்பு: இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் முறைகேடு பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் ஜூன் 6ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவ்லகள் வெளியாகி உள்ளன. கலந்தாய்வுக்கான மறுதேதி பிறகு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. கலந்தாய்வுக்கான எந்தவொரு விரிவான அறிவிக்கையும் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிடாத நிலையில், கலந்தாய்வு தொடங்குவது தாமதமாகி உள்ளது.
இதுகுறித்து மருத்துவ கலந்தாய்வு குழு கூறுகையில், “ஒருசில மாநிலங்களில் சில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவப் படிப்புகளில் கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டு கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளன. இந்த நடைமுறைகள் முடிந்தவுடன் கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும். இம்மாத இறுதியில் கலந்தாய்வு தொடங்கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.
Also Read: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!
நாளை விசாரணை:
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தன. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இத்தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாகவும், தேர்வெழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும், தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், விசாரணை முடியும் வரை மருத்துவ கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ கலந்தாய்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி மத்திய அரசு மற்றும் என்டிஏ உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்தது. அதில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது நேர்மையான முறையில் தேர்வ எதிர்கொண்ட லட்சக்கணக்கான மாணவர்களைக் கடுமையாக பாதிக்கும்.
பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து நேர்மையாக தேர்வை எதிர்கொண்ட மாணவர்களின் நலனை பாதுகாப்பது அரசின் கடமை. நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில், நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த உத்தரவிடுமா? அல்லது நிகழாண்டில் பழை நடைமுறைப்படி 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read: கருணை மதிப்பெண் விவகாரம்.. நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு..