5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

NEET UG Counselling 2024: இளநிலை நீட் கலந்தாய்வு எப்போது? முக்கிய தகவல் இதோ!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக பீகாரில் வினாத்தாள் கசிந்நதாக சிலர் கைதாகினர். அதேபோல, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

NEET UG Counselling 2024: இளநிலை நீட் கலந்தாய்வு எப்போது? முக்கிய தகவல் இதோ!
மாணவர்கள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Jul 2024 07:51 AM

நீட் தேர்வு முடிவுகள்: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடத்தப்பட்ட இத்தேர்வை சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக பீகாரில் வினாத்தாள் கசிந்நதாக சிலர் கைதாகினர். அதேபோல, குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது வழக்கத்திற்கு மாறாக 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றதும் பெரும் சந்தேகத்தை கிளப்பியது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Also Read:  க்யூட் யுஜி மறுதேர்வு தேதி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

இது தொடர்பான மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இது சம்பந்தமான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி,  ஜூலை 20ஆம் தேதி நகரங்கள், மையங்கள் வாரியாக  நீட் தேர்வு முடீவுகள் வெளியாகின. இதனை அடுத்து, மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

கலந்தாய்வு எப்போது?

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநில அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள், மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாலிந இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் கலந்தாய்வு தனிதனியாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11,000 இடங்கள் உள்ள நிலையில், இதில் 1,650க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக கலந்தாய்வை நடத்தும் நிலையில், இன்னும் அதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், இந்த வாரத்திற்குள் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவும் இந்த வாரத்திற்குள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  நீட் கலந்தாய்வு அட்டவணை மற்றும் விண்ணப்பப் பதிவு விவரங்களை https://mcc.nic.in/  என்ற இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Also Read: வெளியானது இளநிலை நீட் தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?

Latest News