NEET UG Counselling 2024: இளநிலை மருத்துவ கலந்தாய்வு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?
மருத்துவ கலந்தாய்வு 2024: தமிழகத்தில் எம்.பி.பிஎஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.52 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 89,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 11,500 மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், ஒரு இடத்திற்கு 7 பேர் போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவ கலந்தாய்வு: தமிழகத்தில் எம்.பி.பிஎஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநில அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள், மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் கலந்தாய்வு தனிதனியாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1,10,000 எம்பிபிஎஸ் இடங்களும், 21,000 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகள், ஒரு இஎஸ்ஐ மருத்து கல்லூரி உள்ளன. தமிழகத்தில் 1.52 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 89,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 11,500 மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், ஒரு இடத்திற்கு 7 பேர் போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: வெளியானது 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது?
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த நிலையில், தமிழகத்தில் எம்.பி.பிஎஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnmedicalselection.net/ மற்றும் https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு எப்போது?
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இடங்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய இடங்களுக்கு 2ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3ஆம் சுற்று மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: கேட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு!
ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான 2வது சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 3வது சுற்று கலந்தாய்வு அக்டோபர் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பு வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் இடம்பெற்றவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.