5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Public Examination Act: நீட் வினாத்தாள் கசிவு.. கடும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.. என்ன தண்டனை தெரியுமா?

நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. நீட், ஜேஇஇ, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வுகள் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  இது மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டம் என அழைக்கப்படுகிறது.

Public Examination Act: நீட் வினாத்தாள் கசிவு.. கடும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு.. என்ன தண்டனை தெரியுமா?
மாணவர்கள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Jun 2024 10:13 AM

நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. நீட், ஜேஇஇ, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வுகள் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  இது மத்திய ஆட்சேர்ப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டம் என அழைக்கப்படுகிறது. இதுதொடர்பாக பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியஙகள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், ஜூன் 21ஆம் தேதி முமதல் நடைமுறைக்கு வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் பொது நுழைவுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளை நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

Also Read: பிரபல ஹோட்டல் சாம்பாரில் கிடந்த எலி.. அதிர்ச்சி வீடியோ..!

10 ஆண்டுகள் சிறை:

கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.  மோசடியைத் தடுக்க குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதோடு, குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். தேர்வு அலுவலர், சேவை வழங்குநர் அல்லது வேறு ஏதேனும் நிறுவனம் உட்பட ஒரு நபர் அல்லது ஒரு குழு குற்றத்தைச் செய்தால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்படம். அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நீடிக்கப்படலாம். மேலும், ரூ.1 கோடிக்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்டு வினாத்தாள்கள் கசிவு குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் ஒரு நிறுவனத்தின் சொத்தை பறிமுதல் செய்வதற்கும் சட்டத்தின் விதிகள் உள்ளன. மேலும் தேர்வுக்கான விகிதாசார செலவும் அதிலிருந்து வசூலிக்கப்படும்.  இருப்பினும், இந்த சட்டம் விண்ணப்பதாரர்களை தண்டனை விதிகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், அவர்கள் தேர்வு நடத்தும் அதிகாரத்தின் தற்போதைய விதிகளின் கீழ் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வு ஆணையம், ரயில்வே, வங்கி ஆட்சேர்ப்பு தேர்வுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் அனைத்து கணினி அடிப்படையிலான தேர்வுகளுக்கு இந்த சட்டம் பொருந்தும்.

Also Read: பிரியங்காவுடன் கைக்கோர்க்கும் மம்தா.. வயநாட்டில் சம்பவம் செய்ய காத்திருக்கும் I.N.D.I.A கூட்டணி!