5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Puthumai Pen Scheme: மாதம் 1,000 ரூபாய்.. இனி அரசு உதவிபெறும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்!

வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலும் புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பித்து மாதந்தோறும் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்பதன் கீழ் புதுமைப் பெண் என்ற பெயரில் இந்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Puthumai Pen Scheme: மாதம் 1,000 ரூபாய்.. இனி அரசு உதவிபெறும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்!
புதுமைப் பெண் திட்டம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Jul 2024 16:40 PM

புதுமைப் பெண் திட்டம்: வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலும் புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பித்து மாதந்தோறும் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்பதன் கீழ் புதுமைப் பெண் என்ற பெயரில் இந்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதுமைப் பெண் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஏழை, எளிய மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தி திட்டத்தில் அரசு பள்ளிகள் மாணவிகள் பயன்பெறும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து அவரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலும் புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பித்து மாதந்தோறும் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பொறியியல் கலந்தாய்வு எப்போது தெரியுமா? இந்த தேதியை குறிச்சு வச்சிக்கோங்க!

இனி அரசு உதவிபெறும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்:

இதுகுறித்து சென்னை ஆட்சியர் ரஷ்மி சிந்தார்த் ஜகடே கூறியிருப்பதாவது, “சமூக நலன் மறறும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக புதுமைப் பெண் தட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் 11,015 மாணவிகள் மாதம் ரூ.1000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தால் பயன் பெற்றனர்.

எனவே, வரும் 2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும் மாணவியர் புதுமைப் பெண் திட்டததில் பயன்பெற அந்தந்த கல்லூரியின் சிறப்பு ஆலுவலர் விண்ணப்பித்து பயன் பெறலாம்” என்றார்.

Also Read: CA முடிவுகள் வெளியானது.. இணையத்தில் எப்படி பார்ப்பது?

Latest News