Public Exam: 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்.. - Tamil News | school education minister anbil mahesh said that public exam time table will be released on monday | TV9 Tamil

Public Exam: 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்..

கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களில் நலன் கருதி முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடுவது வழக்கம். கடந்த ஆண்டு அதாவது 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

Public Exam: 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்..

கோப்பு புகைப்படம்

Published: 

12 Oct 2024 12:56 PM

வரும் திங்கட்கிழமை 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது அக்டோபர் 14 ஆம் தேதி பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 10,11,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும். அந்த வகையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்த அட்டவணை வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை தேர்வுகள் நடத்தப்படும்.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், “ மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ஆலோசனையின்படி, வரும் திங்கள்கிழமை(14.10.2024) அன்று இந்தக் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:  10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 3,000 காலிப் பணியிடங்கள்.. உள்ளூரிலே அரசு வேலை!

கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களில் நலன் கருதி முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடுவது வழக்கம். கடந்த ஆண்டு அதாவது 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

மேலும் படிக்க:  திருவள்ளூர் ரயில் விபத்து.. 13 ரயில் இயக்கத்தில் மாற்றம்.. தென்னக ரயில்வே அறிவிப்பு..

அதேபோல 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 25 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் 14 ஆம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version