போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி.. எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதி என்ன? முழு விவரம்.. - Tamil News | Tamil Nadu government announces application for free coaching for competitive exams know more in detail in Tamil | TV9 Tamil

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி.. எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதி என்ன? முழு விவரம்..

Published: 

09 Sep 2024 09:51 AM

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது என்றும் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி.. எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதி என்ன? முழு விவரம்..

கோப்பு புகைப்படம் (pic courtesy: getty images)

Follow Us On

போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி விண்ணப்பம்: போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 6 மாத கால இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பயிற்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “ TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: 634 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் பண்ட்.. வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.

பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக 10.09-2024 முதல் 24.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 25954905, 044 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 3 குழந்தைகள் உயிரிழப்பு.. தேனியில் நடந்த சோகம்..

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version