இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்.. அரசு அறிவிப்பு..
இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது தீபாவளியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்த வாரம் வியாழன் அன்று கொண்டாடப்பட்டது. அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாகும். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நவம்பர் 1 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் வேலை நாளாக இருந்தது.
தமிழ்நாட்டில் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு அலுவலகங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அக்டோபர் 31 ஆம் தேதி வியாழன் அன்று தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் 1 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கும்படி பல தரப்பில் இருந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு அரசு நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் அதற்கு ஏற்றார் போல சொந்த ஊர்களுக்கு செல்லவும் தீபாவளி பண்டிகை கொண்டாடவும் திட்டமிட முடிந்தது. நவம்பர் 1 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், இன்று நவம்பர் 9 ஆம் தேதி அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது தீபாவளியாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்த வாரம் வியாழன் அன்று கொண்டாடப்பட்டது. அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாகும். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நவம்பர் 1 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் வேலை நாளாக இருந்தது. மீண்டும் நவம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி வார இறுதி நாள், விடுமுறை நாளாகும். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் வெள்ளிக்கிழமை நவம்பர் 1 ஆம் தேதி விடுமுறை அளிக்கும்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டிற்கு முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!
இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து, மக்களின் வசதிக்காக அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரம் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இரண்டு நாட்கள் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே கடந்த 2 வாரங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பாட திட்டத்தில் முடிக்க வேண்டியது விஷயங்கள் நிலுவையில் உள்ளது.
மேலும் படிக்க: தமிழக பாஜகவை நம்புவது வீண்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!
தீபாவளிக்கு அடுத்த நாள் நவம்பர் 1 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று நவம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.