TNPSC: அப்படிப்போடு.. அதிகரிக்கும் குரூப் 4 பணியிடங்கள்.. மகிழ்ச்சியில் தேர்வர்கள்! - Tamil News | Tamil Nadu Public Service Commission announced additional 480 vacancies added in Group IV services | TV9 Tamil

TNPSC: அப்படிப்போடு.. அதிகரிக்கும் குரூப் 4 பணியிடங்கள்.. மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

Published: 

11 Sep 2024 20:38 PM

TNPSC: அப்படிப்போடு.. அதிகரிக்கும் குரூப் 4 பணியிடங்கள்.. மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

கோப்பு புகைப்படம்

Follow Us On

டிஎன்பிஎஸ்சி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த தேர்வை எழுதிய தேர்வர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கமான நிகழ்வாகும். அரசு துறைகளில் உள்ள பல்வேறு நிலைகளை குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என வகையாக பிரித்து இந்த தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுவது வழக்கம்.

Also Read: Post Office Scheme : வட்டி மட்டுமே ரூ.20,500.. அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

இந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். இந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம்தேதி நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இதில் குரூப் 4 பிரிவில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், இளநிலை செயல் பணியாளர், வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர், பால் அளவையாளர், ஆய்வக உதவியாளர்,தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், நேர்முக எழுத்தர் தனிச் செயலர், வரித்தண்டலர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் என பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 6244 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

Also Read: Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!

இந்த தேர்வினை எழுத சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால்  15 லட்சம் பேர் தான் தேர்வு எழுதினார்கள். கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வுக்காக மாநில முழுவதும் சுமார் 7, 247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 1.33 லட்சம் பேர் குரூப் 4 தேர்வில் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் அது குறித்த தகவல்களை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. இதனால் தேர்வு முடிவுக்காக காத்திருந்த தேர்வர்கள் சற்று நிம்மதியடைந்தனர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் 6.244 ஆக இருந்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6,724 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரூப் 4 தேர்வு பற்றி விபரம் 

குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு அதிகபட்ச வயது 42 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் இளநிலை உதவியாளர் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் தொலைபேசி இயக்குபவர் வரவேற்பாளர் வரை தண்டலர் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது வரம் 37 ஆகவும் பிற பிரிவினருக்கு 34 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வில் கட் ஆப் மதிப்பெண் நடப்பாண்டு முதல் குறைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. தற்போது பணியிடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கடந்த முறையை விட கட் ஆஃப் மதிப்பெண் 2 குறையும் எனவும் சொல்லப்படுகிறது. உரிய கட் ஆப் மதிப்பெண் கொண்டவர்களுக்கு ஆவணங்கள் சரிபார்த்த பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version