5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TNPSC Group 2, 2A Exam: தொடங்கியது குரூப் 2, 2ஏ தேர்வு.. 2,327 காலி பணியிடங்களுக்காக தேர்வெழுதும் 7.93 லட்சம் பேர்..

 குரூப் 2 பதவிகளுக்கான தேர்வின் மூலம் 507 பணியிடங்களும், குரூப் 2ஏ தேர்வு மூலம் 1,820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.  குருப் 2 மற்றும் 2 ஏ ஆகிய பதவிக்கான பணியிடங்களுக்கு மொத்தம் 7,90, 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.  

TNPSC Group 2, 2A Exam: தொடங்கியது குரூப் 2, 2ஏ தேர்வு.. 2,327 காலி பணியிடங்களுக்காக தேர்வெழுதும் 7.93 லட்சம் பேர்..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 14 Sep 2024 09:46 AM
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில் சரியாக காலை 8 மணிக்கு தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் உள்ளன. இத்தேர்வினை 7,93,966 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும்
செயல்படுவார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறை பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆணையம் மூலம் நடத்தப்படுகிறது. இதற்காக குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர்.  இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு முடிந்த நிலையில் அடுத்த மாதம் அதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் 6.244 ஆக இருந்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6,724 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி துறை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கு ஜூன் 20 ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு, தேர்வர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒருநாள் (ஜூலை 20) கால அவகாசம் வழங்கப்பட்டது.
 குரூப் 2 பதவிகளுக்கான தேர்வின் மூலம் 507 பணியிடங்களும், குரூப் 2ஏ தேர்வு மூலம் 1,820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.  குருப் 2 மற்றும் 2 ஏ ஆகிய பதவிக்கான பணியிடங்களுக்கு மொத்தம் 7,90, 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
அதன்படி, குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வை இன்று 7,90,376 தேர்வர்கள், தமிழகத்தில் 2,763 தேர்வு மையங்களில் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 251 தேர்வு மையங்களில், 75,185 பேர் தேர்வை எழுதவுள்ளனர்.
ஏற்கனவே தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும், சலுகை நேரமாக 9 மணி வரையும்,  அதற்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்களென டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
 தேர்வுக்கூடத்தில் தேர்வர்களின் தவறான நடத்தை மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக்கூடாதென்றும், தேர்வு நடைபெறுவதற்கு முன்னரோ பின்னரோ அல்லது தேர்வு நடைபெறும் பொழுதோ, தவறாக நடக்கும் தேர்வர்களின் வினாத்தாளுடன் கூடிய விடைத்தொகுப்பு மதிப்பீடு செய்யப்படமாட்டாதெனவும், குறிப்பிட்ட காலம் வரையில் தகுதிநீக்கம் செய்யப்படுவதுடம், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படுமெனவும், ஆள் மாறாட்டம் மற்றும் தேர்வுக்கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள்  தேர்வு எழுதுவதிலிருந்து தேர்வர் விலக்கி வைக்கப்படுவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தின் தலைவர் , உறுப்பினர், செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் , பிற அலுவலர்கள் அல்லது ஊழியர்களின ஆதரவை பெற நேரடியாகவோ, கடிதத்தின் மூலமாகவோ , உறவினர், நண்பர் , காப்பாளர், அலுவலர் அல்லது வேறொருவர் மூலமாக செல்வாக்கை முயற்சித்தால் 3 ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்களெனவும்,  ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் நிரந்தரமாக தடை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.. அதன்படி, தேர்வர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டபடி காலை 9 மணிக்கு முன்னதாக வந்துவிட வேண்டும்.. அதேபோல் 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள், எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்த நிலையில் காலை 8 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

Latest News