5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamil Puthalvan Scheme: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. இது இருந்தால் ஈஸியா பெறலாம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ’புதுமைப் பெண்' திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், மாணவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கும் ’தமிழ் புதல்வன் திட்டம்' வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

Tamil Puthalvan Scheme: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. இது இருந்தால் ஈஸியா பெறலாம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
கோப்புப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Jul 2024 20:26 PM

தமிழ் புதல்வன் திட்டம்: தமிழ்நாட்டில் ’புதுமைப் பெண்’ திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், மாணவர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கும் ’தமிழ் புதல்வன் திட்டம்’ வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் சுமார் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்தை நிறைவேற்றிட ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் ஆகஸ்ட் மாதம் முதுல் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகளை தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read: சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

எனவே மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் எண் இல்லாதவர்களை ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண் எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார் மையங்கள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மாணவிகளுக்கான ’புதுமைப்பெண்’ திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 30,000 மாணவிகள் கூடுதலாக உயர்க்கல்வியில் சேர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தால் 25 சதவீத கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டம் மாணவிகளிடையே பெறும் வரவேற்பை பெற்றதை அடுத்து, மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆன்லைனில் கட்டட அனுமதி பெற எந்தெந்த மாவட்டத்திற்கு எவ்வளவு? முழு விவரம்!

Latest News