5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamil Puthalvan Scheme: மாணவர்களுக்கு ரூ.1000 எப்போது? ‘தமிழ் புதல்வன்’ திட்டம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ் புதல்வன் திட்டம்: ஆகஸ்ட் மாதத்தில் ’தமிழ் புதல்வன்' திட்டம் தொடக்கப்படும் என்றும் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'தமிழ் புதல்வன்' திட்டம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் முதல் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மாணவிகளுக்கான ’புதுமைப்பெண்’ திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, மாணவர்களுக்கான ’தமிழ் புதல்வன் திட்டம்' தொடங்கப்படுகிறது.

Tamil Puthalvan Scheme: மாணவர்களுக்கு ரூ.1000 எப்போது? ‘தமிழ் புதல்வன்’ திட்டம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Jun 2024 12:32 PM

‘தமிழ் புதல்வன்’ திட்டம்: அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் முதல் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில், 2023-24ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுபுப அரசுப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை ஐவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பள்ளிகல்வித்துறை நிகழ்சிகளில் கலந்துகொள்ள நான் பெரிதும் விரும்புவேன். என்னை காட்டிலும் பெரிதும் பள்ளிக்கல்வித்துறை நிகழ்சிகளில் பங்கேற்க விரும்புவது உதயநிதி ஸ்டாலின் தான். தேர்தல் முடிந்தவுடன் நான் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி உள்ளது. மாணவர்களை பார்க்கின்ற போது எனக்கு இளமை திரும்பி விடுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Also Read: ”3ஆம் பாலினத்தவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் ரூ.1000: 

நான் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது புதுமைப் பெண் திட்டத்தை பாராட்டி பேசினர். மாணவிகளுக்கு வழங்கும் 1000 ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தால் மாணவிகள் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.  ஆகஸ்ட் மாதத்தில் ’தமிழ் புதல்வன்’ திட்டம் தொடக்கப்படும். அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் முதல் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்” என்றார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மாணவிகளுக்கான ’புதுமைப்பெண்’ திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 30,000 மாணவிகள் கூடுதலாக உயர்க்கல்வியில் சேர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப் பெண் திட்டத்தால் 25 சதவீத கல்லூரி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டம் மாணவிகளிடையே பெறும் வரவேற்பை பெற்றதை அடுத்து, மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: பக்ரீத் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் சிறப்பு பேருந்துகள்.. எங்கெல்லாம் தெரியுமா?