5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TNGASA Admission 2024: முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நேற்று முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. எனவே மாணவர்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும். இதன்பிறகு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதுல் 23ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கு நடைபெறுகிறது.

TNGASA Admission 2024: முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
மாணவர்கள்
umabarkavi-k
Umabarkavi K | Published: 28 Jul 2024 09:04 AM

முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாட்டில் அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நேற்று முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. எனவே மாணவர்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும். இதன்பிறகு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதுல் 23ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பாதுகாப்புப்படை வீர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

மேலும், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கலந்தாய்வு முடிந்த பிறகு முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பொறியியல் மாணவர் சேர்க்கை.. இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பிரிவு கலந்தாய்வு..

விண்ணப்பிப்பது எப்படி?

  • மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையத்தை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
  • இதில் “Click here to new Registration”என்பறத கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளீட வேண்டும்.
  • உங்கள் பெயர், மின்னஞசல் முகவலி, கடவுச்சொல் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்
  • இந்த விவரங்களை முடித்த பின்  “Save” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அப்போது உங்கள் மொபைல் போனுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) வரும். அனை உள்ளீட்டு “Submit” என்பறத கிளிக் செய்யவும்.
  • நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவாி (Email Id) மற்றும் கடவுச்சொல்றை (Password) பயன்படுத்தி லாக்கின் செய்து கொள்ளலாம்.
  • பின்னர், மாணவரின் பெயர், பெற்றோர், தொடர்பு முகவரி, பாலினம், பிறந்ததேதி, மாவட்டத்தின் குடிமை நிலை போன்ற விவரங்களை உள்ளீட வேண்டும்
  • பின்னர், உங்களுக்கு விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவு போன்றவற்றை தேர்வு செய்து கொள்ளவும்
  • இறுதியாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உங்களது விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் ரூ.1 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவனருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. பதிவு கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை மாணவர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, Internet Banking, யுபிஐ மூலமாக செலுத்திக் கொள்ளலாம்.

Also Read:  ‘தமிழ் புதல்வன் திட்டம்’… யார் யாருக்கு மாதம் ரூ.1,000.. தமிழக அரசு வெளியிட்ட முக்கியம் அறிவிப்பு

Latest News