TAHDCO Free Coaching: சிஏ படிப்பவரா? அரசு தரும் இலவச பயிற்சி.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பட்டய கணக்காளர் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என பலருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. மேலும், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கும் தமிழக அரசு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும், வெளிநாட்டில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர ஏதுவாக, வெளிநாட்டு மொழிகளை இலவசமாக கற்றுக் கொடுத்தும் வருகிறது. அதோடு இல்லாமல், அனைத்து சமூதாய மக்களின் வளர்ச்சிக்காகவும், கல்விக்காவும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
என்னென்ன பயிற்சி வகுப்புகள்?
இதில் குறிப்பாக ஆதிதிராவிட சமூதாய மக்களின் வளர்ச்சிக்காக தாட்கோ சார்பில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பட்டய கணக்காளர் உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தாட்கோ மூலம் பட்டய கணக்காளர் (Chartered Accountant – Intermediate), நிறுவன செயலாளர் (company Secretary – Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் (Cost and Management Accountant – Intermediate) ஆகிய போட்டித் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Also Read : டிகிரி போதும்.. மாதம் ரூ.80,000 சம்பளம்… வங்கியில் சூப்பரான வேலை!
தகுதிகள் என்னென்ன?
தாட்கோ மூலம் பட்டய கணக்காளர் (Chartered Accountant – Intermediate), நிறுவன செயலாளர் (company Secretary – Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் (Cost and Management Accountant – Intermediate) ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டுமே பயிற்சிக்கு பதிவு செய்ய வேண்டும். இளநிலை வணிகவியல் பட்டம் (B.Com) பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை இருக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பட்டய கணக்காளர் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @MMathiventhan @tahdco #TNDIPR #TNMediahub #CMMKStalin #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/QCqXUMAe7H
— TN DIPR (@TNDIPRNEWS) November 1, 2024
தாக்கோ பயிற்சிக்கு வரும் மாணவர்கள் என்ன வசதிகள்?
தாட்கோ மூலம் பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் மாணவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Also Read : தமிழில் எழுத, படிக்க தெரியுமா? அட்டகாசமான வேலை.. மிஸ் பண்ணாதீங்க!
பதிவு செய்வது எப்படி?
மேற்கண்ட பணிகளுக்கு பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.