TN Half Yearly Exam : அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

அரையாண்டு தேர்வு 2024: 2024-25ஆம் கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு அதிகாரப்பூர்வ அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய 23ஆம் தேதி முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Half Yearly Exam : அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..  எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

மாணவர்கள்

Updated On: 

23 Nov 2024 08:23 AM

2024-25ஆம் கல்வியாண்டிற்கான அரையாண்டு தேர்வு அதிகாரப்பூர்வ அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய 23ஆம் தேதி முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25 கல்வியாண்டில் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடந்து முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

இதில் தேர்வு தேதி, அரையாண்டு விடுமுறை, பள்ளிகள் திறப்பு போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய 23ஆம் தேதி முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் 10,12ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,  10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. அதாவது, டிசம்பர் 10ஆம் தேதி தமிழ் தேர்வு, டிசம்பர் 11ஆம் தேதி விருப்ப மொழி பாடம் தேர்வு, டிசம்பர் 12ஆம் தேதி ஆங்கிலம் தேர்வு, டிசம்பர் 16ஆம் தேதி கணிதம் தேர்வு, டிசம்பர் 19ஆம் தேதி அறிவியில் தேர்வு, டிசம்பர் 23ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலை 9.45 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. 9.45 மணி முதல் 9.55 மணி வரை வினாத்தாள்களை படிக்கவும், தொடர்ந்து ஐந்து நிமிடம் தரவுகளை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்படுகிறது. சரியாக 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பகல் 1 மணிக்கு முடிவடைகிறது.

Also Read : சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு

10, 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடைகிறது. அதன்படி, டிசம்பர் 9ஆம் தேதி தமிழ் தேர்வு, டிசம்பர் 10ஆம் தேதி ஆங்கிலம், டிசம்பர் 12ஆம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிர் வேதியில், அரசியல் அறிவியல், புள்ளியியல் தேர்வுகள் நடைபெற உள்ளது.

டிசம்பர் 14ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல் தேர்வுகள், டிசம்பர் 17ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகம், ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு தேர்வுகள், டிசம்பர் 20ஆம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல் தேர்வுகள், டிசம்பர் 23ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலை 9.45 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. 9.45 மணி முதல் 9.55 மணி வரை வினாத்தாள்களை படிக்கவும், தொடர்ந்து ஐந்து நிமிடம் தரவுகளை சரிபார்க்கவும் நேரம் ஒதுக்கப்படுகிறது. சரியாக 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பகல் 1 மணிக்கு முடிவடைகிறது.

Also Read : +2 பொதுத்தேர்வு கட்டணம்.. செலுத்துவது எப்படி? யாருக்கு விலக்கு? வெளியான முக்கிய அறிவிப்பு!

அரையாண்டு விடுமுறை எப்போது?

அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. இதில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையும், ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டும் விடுமுறையும் இருக்கிறது. மொத்தம் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதாவது, டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜனவரி 2ஆம் தேதி வியாழன்கிழமை மூன்றாம் பருவ வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்த நாளிலேயே மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!