5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது. 6 முதல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு நேரம் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையும், 8ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், 9ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், 10ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரையும் நடத்தப்படது.

School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 25 Sep 2024 12:45 PM

பள்ளிக்கல்வித்துறை தரப்பில் காலாண்டு தேர்வு நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 6 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2024-25ஆம் அண்டிற்கான காலாண்டுத் தேர்விற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தரப்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பொதுவாகவே, தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் காலாண்டு தேர்வு நடக்கும், விடுமுறை எத்தனை நாட்கள் என்று தான் மாணவர்கள் நினைப்பார்கள். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி காலாண்டுத தேர்வு தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.

அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது. 6 முதல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு நேரம் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையும், 8ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், 9ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், 10ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரையும் நடத்தப்படது.

மேலும் படிக்க: குஜராத்தில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..

6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி தமிழ் தேர்வும், செப்டம்பர் 21ஆம் தேதி Physical Education தேர்வும், செப்டம்பர் 23ஆம் தேதி ஆங்கில தேர்வும், செப்டம்பர் 24ஆம் தேதி optical Language தேர்வும், செப்டம்பர் 25ஆம் தேதி கணிதம் தேர்வும், செப்டம்பர் 26ஆம் தேதி அறிவியல் தேர்வும், செப்டம்பர் 27ஆம் தேதி சமூக அறிவியில் தேர்வும் அறிவிப்பின்படி நடத்தப்பட்டது.

அதேபோல, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ் தேர்வும், செப்டம்பர் 20ஆம் தேதி ஆங்கில தேர்வும், செப்டம்பர் 21ஆம் தேதி இயற்பியல், வணிகம், Employement skills தேர்வும், செப்டம்பர் 23ஆம் தேதி கணிதம், காமர்ஸ், விலங்கியல், நுண்ணுயிரியல், நர்சிங் தேர்வும், செப்டம்பர் 25ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் தேர்வும், செப்டம்பர் 26ஆம் தேதி கணினி, Statics, உயிர் வேதியியல் தேர்வும், செப்டம்பர் 27ஆம் தேதி வேதியில், கணக்கியல், புவியியல் தேர்வும் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க: மீண்டும் கார் பந்தையத்தில் களமிறங்கும் அஜித்… வைரலாகும் தகவல்

தேர்வுகள் முடிந்து 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் காலாண்டு விடுமுறையை நீடிக்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விடுமுறை நாட்களை நீடித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest News