5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Holiday: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. உங்க லீவ இப்படி பிளான் பண்ணுங்க!

பள்ளிகள் விடுமுறை: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (செப்டம்பர் 13) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

School Holiday: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. உங்க லீவ இப்படி பிளான் பண்ணுங்க!
மாணவர்கள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 13 Sep 2024 16:05 PM

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (செப்டம்பர் 13) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். ஏனென்னறால் தமிழ்நாட்டில் நாளை குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  2024-25ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைச் சுட்டிக் காட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது.  நாளை மட்டும் இல்லாமல் மிலாது நபி பண்டிகைக்கு வரும் 17ஆம் தேதி (செவ்வாய் கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால் மிலாது நபி பண்டிகை செப்டம்பர் 16ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்படி இருந்தது. தற்போது திங்கள் விடுமுறை செவ்வாய் கிழமைக்கு மாற்றப்பட்டிருப்பதால் இடையில் ஒருநாளை வேலை நாளாக மாறியுள்ளது. இருப்பினும், திங்கள் கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Also Read: வெளியான வீடியோ.. மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரம்!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு:

இப்படியான சூழலில் தான் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 7.93 லட்சம் பேர் எழுதுகின்றநனர்.  இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதனால், தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு அறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கடைபிடித்து தேர்வர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 2,327 காலி பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில், குரூப் 2, 2ஏ  பிரிவில் காலியாக உள்ள 2,327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி முடிந்தது. 8 லட்சம் விண்ணப்பித்திருந்த நிலையில், 7.93 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில், நாளை  2,763 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு விவரங்கள்:

இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு எழுத்துத் தேர்வாக நடைபெறும். இதற்கு 3 மணி நேரம் அவகாசம். இதில் பொது தமிழ்/பொது ஆங்கிலம், பொது ஆய்வுகள், திறன் மற்றும் திறன் சோதனை ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். மொத்தம் 200 கேள்விகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது. முதன்மைத் தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதுவும் ஆப்லைனில் நடைபெறும்.

Also Read: அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!

இதில், தாள் ஒன்றுக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்களும், தாள் இரண்டிற்கு 3 மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். இந்த இரண்டு தேர்வில் தகுதியான மதிப்பெண்கள் பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்  தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News