5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.. இத்தனை நாட்கள் விடுமுறையா? முக்கிய அறிவிப்பு!

Tamilnadu Quarterly Exam 2024: பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி காலாண்டுத தேர்வு தொடங்குகிறது. இது செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளத-

காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.. இத்தனை நாட்கள் விடுமுறையா? முக்கிய அறிவிப்பு!
மாணவர்கள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Sep 2024 11:16 AM

காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு:  தமிழ்நாட்டில் 2024-25ஆம் அண்டிற்கான காலாண்டுத் தேர்விற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பொதுவாகவே, தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது செப்டம்பர் மாதம் நடந்து வருகிறது. இந்த மாதம் தொடங்கினாலே எப்போது காலாண்டு தேர்வு நடக்கும், விடுமுறை எத்தனை நாட்கள் என்று தான் மாணவர்கள் நினைப்பார்கள். செப்டம்பர் மாதம் தொடங்கியபோதே மாணவர்கள் காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்து இருப்பார்கள். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி காலாண்டுத தேர்வு தொடங்குகிறது. இது செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Also Read: போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி.. எப்படி விண்ணப்பிக்கலாம்? தகுதி என்ன? முழு விவரம்..

காலாண்டுத் தேர்வு எப்போது?

அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு நேரம் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையும், 8ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், 9ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், 10ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விவரங்கள்:

6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி தமிழ் தேர்வும், செப்டம்பர் செப்டம்பர் 21ஆம் தேதி Physical Education தேர்வும், செப்டம்பர் 23ஆம் தேதி ஆங்கில தேர்வும், செப்டம்பர் 24ஆம் தேதி optical Language தேர்வும், செப்டம்பர் 25ஆம் தேதி கணிதம் தேர்வும், செப்டம்பர் 26ஆம் தேதி அறிவியல் தேர்வும், செப்டம்பர் 27ஆம் தேதி சமூக அறிவியில் தேர்வும் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதேபோல, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ் தேர்வும், செப்டம்பர் 20ஆம் தேதி ஆங்கில தேர்வும், செப்டம்பர் 21ஆம் தேதி இயற்பியல், வணிகம், Employement skills தேர்வும், செப்டம்பர் 23ஆம் தேதி கணிதம், காமர்ஸ், விலங்கியல், நுண்ணுயிரியல், நர்சிங் தேர்வும், செப்டம்பர் 25ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் தேர்வும், செப்டம்பர் 26ஆம் தேதி கணினி, Statics, உயிர் வேதியியல் தேர்வும், செப்டம்பர் 27ஆம் தேதி வேதியில், கணக்கியல், புவியியல் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்:

காலண்டு தேர்வு அறிவிக்கப்பட்டாலே விடுமுறை எத்தனை நாட்கள் இருக்கும் என்று தான் மாணவர்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் எப்போது தெரியுமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

5 நாட்கள் விடுமுறை:

எனவே பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை மொத்தமாக ஐந்து நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடுமுறை நாட்களுக்கு ஏற்றவாறு உங்கள் வெளியூர் பயணங்கள் மாணவர்கள் திட்டமிட்டு கொள்ளுங்கள். கடந்த 2023-24ஆம் ஆண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கியது. 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கியது. தேர்வு முடிந்து விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News