TN School Reopen: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு.. எப்போது தெரியுமா?

பள்ளிகள் திறப்பு: தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கோடை விடுமுறையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதன்பிறகு கோடை வெயில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால், மாணவர்களின் நலன்கருதி பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

TN School Reopen: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு.. எப்போது தெரியுமா?

மாணவர்கள்

Updated On: 

31 May 2024 17:14 PM

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கோடை விடுமுறையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10,12,11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடந்தது. 1 முதல் 3ஆம் தேதி வகுப்பு வரை ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரையும், ஏப்ரல் 2 முதல் 23ஆம் தேதி வரை 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதன்பிறகு, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுவதால் முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பள்ளிகள் திறப்பு எப்போது என்று மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்ததுள்ளது. பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Also Read: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. தமிழ்நாடு நிலைமை என்ன?

காரணம் என்ன?

கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதன்பிறகு கோடை வெயில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால், மாணவர்களின் நலன்கருதி பள்ளி திறப்பு தேதியை தள்ளிவைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை திருத்தணியில் 42.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34° – 43° செல்சியஸ் மற்றும் தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37° – 40° செல்சியஸ்; தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 32° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° – 26° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 41.9° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 40. 1° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Also Read: தூத்துக்குடியில் ஆளில்லா கிராமம்… இருந்த ஒரேயொரு முதியவரும் இறந்ததால் காலியான ஊர்!

 

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?