5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN School Reopen: முடிந்தது கோடை விடுமுறை… தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் 10,12,11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடந்தது. 1 முதல் 3ஆம் தேதி வகுப்பு வரை ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரையும், ஏப்ரல் 2 முதல் 23ஆம் தேதி வரை 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதன்பிறகு, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு இன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

TN School Reopen: முடிந்தது கோடை விடுமுறை… தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு!
மாணவர்கள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Jun 2024 09:18 AM

தமிழ்நாட்டில் 10,12,11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடந்தது. 1 முதல் 3ஆம் தேதி வகுப்பு வரை ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரையும், ஏப்ரல் 2 முதல் 23ஆம் தேதி வரை 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதன்பிறகு, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறுவதால் முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிகள் திறப்பு எப்போது என்று மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்ததுள்ளது. பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.

Also Read: வெளியானது ஜேஇஇ தேர்வு முடிவுகள்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?

ஆனால், இந்த முறை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதாவது, அதன்படி, 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.  எனவே, மாணவர்களுக்கு இன்றே பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள் இன்றையே வழங்கப்பட உள்ளன. மேலும், புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதே நடைமுறை தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட மாணவர்களுக்கும் பொருந்தும். இது தொடர்பாக நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துநர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Also Read: சென்னையில் பார்க்கிங் இலவசம்… மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட மாநகராட்சி..!