5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Reopen: முடிந்தது காலாண்டு விடுமுறை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்களுக்கான உத்தரவு என்ன?

செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடக்கும், விடுமுறை எத்தனை நாட்கள் என்று தான் மாணவர்கள் நினைப்பார்கள். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி காலாண்டுத தேர்வு தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.

School Reopen: முடிந்தது காலாண்டு விடுமுறை.. இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்களுக்கான உத்தரவு என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 07 Oct 2024 08:17 AM

9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024-25ஆம் அண்டிற்கான காலாண்டுத் தேர்விற்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தரப்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பொதுவாகவே, தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடக்கும், விடுமுறை எத்தனை நாட்கள் என்று தான் மாணவர்கள் நினைப்பார்கள். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி காலாண்டுத தேர்வு தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.

அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது. 6 முதல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு நேரம் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையும், 8ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், 9ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், 10ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரையும் நடத்தப்படது.

மேலும் படிக்க: சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. 100 பேருக்கு சிகிச்சை!

தேர்வுகள் முடிந்து 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஆனால் விடுமுறை நாட்களை நீடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இது தொடர்பான ஆலோசனையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்துடன் நடத்தினார். அதனை தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி வரை அறிவித்திருந்த விடுமுறையை நீடித்து அக்டோபர் 6 ஆம் தேதி வரை விடுமுறை என அறிவித்தது.

மேலும் படிக்க: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?

இந்த அறிவிப்பிற்கு பின், அதாவது 9 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அனைத்து தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் இதில் உள்ளடங்கும். இந்த விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. மீறினார் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வக்குப்பறைகள் தூய்மைபடுத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். அதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் முதல் நாளே திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே முதல் நாளான இன்று மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News