மே 14ஆம் தேதி வெளியாகிறது +1 பொதுத்தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?
Tn 11th Exam Results: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி என மொத்தம் 8.25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் தனித்தேர்வர்கள் 4,945 பேரும், சிறைவாசிகள் 187 பேரும் எழுதினர். சென்னையில் 65,852 பேர் தேர்வு எழுதினர். 11ஆம் தேதி மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை அடுத்து, மாணவர்கள் அனைவரும் தற்போது தங்களது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வு முடிவுகளை எந்த இணையத்தில் பார்ப்பது?
எனவே, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தப்படியே அறிந்து கொள்ளலாம். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகுகிறது.
எனவே, 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். அதன்படி, https://tnresults.nic.in/ , https://www.dge.tn.nic.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
எப்படி பார்ப்பது?
- https://tnresults.nic.in/ , https://www.dge.tn.nic.in/ என்ற இணையதள லிக்கை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில், TN HSC Result 2024 என்றதை க்ளிக் செய்தவுடன் Login காட்டப்படும்.
- அதில், உங்கள் தேர்வு எண், பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
- உங்கள் தேர்வு முடிவுகள் தெரிந்தவுடன் அதை ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.
Also Read : 5 ஆண்டு சட்டப்படிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!