வெளியானது +2 தேர்வு முடிவுகள்…94.56 சதவீத பேர் தேர்ச்சி! - Tamil News | | TV9 Tamil

வெளியானது +2 தேர்வு முடிவுகள்…94.56 சதவீத பேர் தேர்ச்சி!

Updated On: 

06 May 2024 10:30 AM

TN 12th Board Exam Result: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 0.53 சதவீத மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது.

வெளியானது +2 தேர்வு முடிவுகள்...94.56 சதவீத பேர் தேர்ச்சி!
Follow Us On

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு:

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இதனை அடுத்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். மாணவ, மாணவிகள் https://tnresults.nic.in/ , https://www.dge.tn.nic.in/ஆகிய இணையதளங்களில் மூலமாக தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

94.56 சதவீத பேர் தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் 3,93,890 (96.44%), மாணவர்கள் 3,25,305 (92.37%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில், திருப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஈரோடும், மூன்றாம் இடத்தில் அரியலூரும் இடம்பிடித்துள்ளது. வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்:

மேலும், அரசு, தனியார் என மொத்தமாக 2,478 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகதத்தைப் பெற்றுள்ளன. இதில், 397 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.

அரசுப்பள்ளிகளில் 91.32 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதமும், மகளிர் பள்ளிகளில் 96.39 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 86.96 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 94.7 சதவிதமும் தேர்ச்சி விகிதம் இருக்கிறது.

கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி:

மேலும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 0.53 சதவீத மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி நிலவரம்:

புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 92.41 சதவிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 12,012 மாணவர்களில் 12,948 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 92.41 சதவீதமாக உள்ளது.

பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version