5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

+2 தேர்வு முடிவுகள்… எந்த மாவட்டம் டாப் தெரியுமா? மாவட்ட வாரியாக விவரம்!

TN 12th Exam Results: திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாகவும், திருவண்ணாமலையில் தேர்ச்சி விகிதம் குறைவாகவும் பதிவாகி உள்ளது.

+2 தேர்வு முடிவுகள்… எந்த மாவட்டம் டாப் தெரியுமா? மாவட்ட வாரியாக விவரம்!
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 May 2024 11:26 AM

12ஆம் வகுப்பு

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இதனை அடுத்து, தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் 3,93,890 (96.44%), மாணவர்கள் 3,25,305 (92.37%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில், திருப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் ஈரோடும், மூன்றாம் இடத்தில் அரியலூரும் இடம்பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:

  1. சென்னை – 94.48%
  2. செங்கல்பட்டு – 94.71%
  3. காஞ்சிபுரம் – 92.28%
  4. திருவள்ளூர் – 91.32%
  5. கடலூர் – 94.36%
  6. விழுப்புரம் – 93.17%
  7. திருவண்ணாமலை – 90.47%
  8. அரியலூர் – 97.25%
  9. பெரம்பலூர் – 96.44%
  10. கள்ளக்குறிச்சி – 92.91%
  11. திருவாரூர் – 93.08%
  12. தஞ்சை – 93.46%
  13. மயிலாடுதுறை – 92.38%
  14. நாகைப்பட்டினம் – 91.99%
  15. திருப்பத்தூர் – 92.34%
  16. வேலூர் – 92.53%
  17. திருச்சி – 95.74%
  18. கரூர் – 95.90%
  19. புதுக்கோட்டை – 93.79%
  20. தருமபுரி – 93.55%
  21. கிருஷ்ணகிரி – 91.87%
  22. சேலம் – 94.60%
  23. ஊட்டி – 94.27%
  24. நெல்லை – 96.44%
  25. தென்காசி – 96.07%
  26. ராமநாதபுரம் – 94.89%
  27. தேனி – 94.65%
  28. மதுரை – 95.19%
  29. திண்டுக்கல் – 95.40%
  30. கோவை – 96.97%
  31. திருப்பூர் – 97.45%
  32. தூத்துக்குடி – 96.39%
  33. கன்னியாகுமரி – 95.72%
  34. விருதுநகர் – 96.64%
  35. நாமக்கல் – 93.49%
  36. சிவகங்ககை – 97.42%
  37. ஈரோடு – 97.42%
  38. ராணிப்பேட்டை – 92.28%

 

Latest News