5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

+2 மதிப்பெண்ணில் சந்தேகமா? மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..எப்படி?

TN 12th Mark Revaluation: 12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 மதிப்பெண்ணில் சந்தேகமா? மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..எப்படி?
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 07 May 2024 07:09 AM

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனை அடுத்து, தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் 3,93,890 (96.44%), மாணவர்கள் 3,25,305 (92.37%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மறுக்கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:

இந்த நிலையில், அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்திருந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளதாக உணவரும் மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் மறுக்கூட்டல் அல்லது விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகர் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

Also Read : வெளியானது +2 தேர்வு முடிவுகள்…94.56 சதவீத பேர் தேர்ச்சி!

கட்டணம்:

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகர் பெறுவதற்கான கட்டணம் ரூ.275 வழங்கப்படுகிறது. மறுகூட்டல் கட்டணமாக உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ரூ.205 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை தங்கள் பள்ளிகளின் வாயிலாக செலுத்தலாம்.

பதிவிற்றம் செய்வது எப்படி?

மதிப்பெண் நகலை மே 9ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால், மாணவர்கள் தங்களது பிறந்ததேதி, பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்து, என்ற https://www.dge.tn.nic.in/ என்ற இணையதளம் மூலம் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் தங்கள் பிறந்த தேதி, பதிவுஎண் போன்ற விவரங்களை என்ற https://www.dge.tn.nic.in/இணையதளம் மூலம் தங்கள் மதிப்பெண் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : +2 தேர்வு முடிவுகள்… எந்த மாவட்டம் டாப் தெரியுமா? மாவட்ட வாரியாக விவரம்!

Latest News