5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு..எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ!

TN 12th Supplementary Exam: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் மே 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு..எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ!
umabarkavi-k
Umabarkavi K | Published: 08 May 2024 10:47 AM

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு:

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகின. இதில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனை அடுத்து, தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கான துணைத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கு மாணவர்கள் மே 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Also Read : +2 மதிப்பெண்ணில் சந்தேகமா? மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..எப்படி?

விண்ணப்பிக்கும் தேதி:

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்கள் அவரவர் பள்ளிகளுக்கு நேரில் சென்று மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, தனித்தேர்வர்கள் மற்றும், 2024ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்கள் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கு தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை http://www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்ப கட்டணம்:

ஏற்கனவே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கு ரூ.50 தேர்வு கட்டணமாகவும், இதரக் கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும்.

12ஆம் வகுப்பு தேர்வினை முதன்முறையாக எழுதவுள்ள தேர்வர்கள் தேர்வு கட்டணமாக 150 ரூபாயும், இதரக் கட்டணமாக ரூ.35 என மொத்தம் 185 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை சேவை மையத்தில் அல்லது பள்ளியில் பணமாகக் செலுத்த வேண்டும்.

Also Read : பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை.. விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!

தேர்வு தேதிகள்:

12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Latest News