5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Education: 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லையா? தமிழக அரசின் நிலை என்ன?

தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழ்தான் முதல் பாடமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்திருந்தது.

TN Education: 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லையா? தமிழக அரசின் நிலை என்ன?
தமிழக அரசு Image Credit source: X
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Dec 2024 07:33 AM

பள்ளிக்கல்வித்துறை: 2024 -2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என கல்வித்துறை அறிவித்துள்ளதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 10, 11,12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடைமுறை அமலில் இருந்து வருகிறது. குறைந்தப்பட்சம் 6 மாதங்களுக்கு முன்பே இந்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகளும் மாணவர்களை தயார் செய்யும் பணிகளும் நடைபெற்று வருவது வழக்கம். இப்படியான நிலையில் 2024 – 25 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Amit Shah On UCC: பாஜக அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் UCC கொண்டு வரும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி!

வைரலான செய்தி

இந்த நிலையில் நேற்றைய தினம் சமூக வலைத்தளப்பக்கத்தில் செய்தி ஒன்று வைரலாக பரவியது. அதன்படி, “10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் இல்லை என திமுக அரசின் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுதிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவா நீங்கள் தமிழ் வளர்க்கும் லட்சணம்?” என வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தது. தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு இந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது.

Also Read:Tiruvannamalai: மகாதீபம் காண திருட்டுத்தனமாக சென்று மாட்டிக்கொண்ட பெண்!

உண்மை நிலவரம் என்ன?

அதன்படி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக அரசு தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என அறிவித்ததாக பொய் பரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழ்தான் முதல் பாடமாக அறிவிக்கப்பட்டது. மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் விலக்கு அளித்திருந்தது.

இதனை விசாரித்து உறுதி செய்த உச்ச நீதிமன்றம் 2023 ஆம் ஆண்டிற்கும் தேர்வில் விலக்கு என்பது பொருந்தும் என தீர்ப்பளித்திருந்தது. இந்த நிலையில் தமிழாசிரியர்கள் நியமனம் மொழி சிறுபான்மை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக மொழி சிறுபான்மை பேரவையினரின் கோரிக்கையை ஏற்று கட்டாய மொழிப்பாடமான தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து  2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் இந்த தகவலை பொதுவாக அறிவித்ததாக பொய் செய்தி பரப்பப்படுகிறது. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Latest News