5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

School Leave: கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?

Rain Alert: காற்றழுத்த தாழ்வு பகுதியானது கேரளாவை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக தென் மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

School Leave: கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Dec 2024 06:45 AM

பள்ளிகள் விடுமுறை: கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தேசமயம் தேனி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது மேற்கு – வட மேற்கு திசையில் நபர்ந்து கேரளாவின் அரபிக் கடலை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததால் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. நேற்று முன்தினம் காலை தொடங்கி மாலை வரை தமிழகத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக் கொட்டி தீர்த்தது. சென்னையில் காலை 7  மணிக்கு தொடங்கிய மழை மாலை வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

வெள்ளக்காடான தென் மாவட்டங்கள்

இதனிடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கேரளாவை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக தென் மாவட்டங்கள் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலியில் 24 மணி நேரத்தில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும், தண்ணீர் தேங்கியும் நிலைமை மோசமானதாக மாறியது.

கால்வாய்களில் அமலைச் செடிகள் ஆக்கிரமித்ததால் வெள்ள நீரானது அருகில் உள்ள தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் செய்வது தெரியாத மக்கள் திகைத்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை  இணைந்து பொதுமக்களை வெள்ளத்தில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டு பணிகளை துரிதமாக மேற்கொண்டது.

Also Read: BPSC Paper Leak: பிபிஎஸ்சி வினாத்தாள் கசிந்ததாக புகார்.. போராட்டம் நடத்திய தேர்வரை அறைந்த அதிகாரி!

இதனிடையே உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திருநெல்வேலியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை முழு வீச்சில் நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆட்சியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

அங்குள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்து செல்லும் வெள்ளத்தைப் பார்வையிட ஏராளமான மக்கள் ஆற்றுப் பாலங்களில் கூடி வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலியில் உள்ள   அணைகளில் இருந்து சுமார் 800 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ள போதிலும் மாநகர பகுதிக்குள் வரும் நீரின் அளவானது சுமார் 65 ஆயிரம் கனஅடி அளவிற்கு உள்ளது.

கனமழை தொடரும் பட்சத்தில் இந்த நீர்மட்டமானது படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் செல்ல கூடும் என்பதால் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் எக்காரணம் கொண்டும் நீர் நிலைகளின் அருகில் வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Karthigai Deepam 2024: மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம்.. அரோகரா கோஷத்தில் அதிர்ந்த திருவண்ணாமலை!

போக்குவரத்து மாற்றம்

கனமழையால் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தென்காசியில் இருந்து கேரளா செல்லும் செங்கோட்டை சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கேரளா செல்லும் சபரிமலை பக்தர்கள் தவித்துப் போயினர். அது மட்டும் இல்லாமல் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வரும் வாகனங்கள் ஏரல் முக்காணி வழியாக திருவைகுண்டம் வந்து அங்கிருந்து குரும்பூர் வழியாக திருச்செந்தூர் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கனமழையால் குற்றால அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News