5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Public Exams: 10,11, 12ம் வகுப்பு மாணவர்களே.. வெளியானது பொதுத்தேர்வு அட்டவணை!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.  இதில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதியும், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Public Exams: 10,11, 12ம் வகுப்பு மாணவர்களே.. வெளியானது பொதுத்தேர்வு அட்டவணை!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Oct 2024 11:55 AM

பொதுத்தேர்வு அட்டவணை: தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.  தமிழகத்தைப் பொறுத்தவரை மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடைமுறை அமலில் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளில் பொதுத்தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டு வந்தது. இந்த வகையில் 2024 – 2025 காண 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.  11 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதியும், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோ  12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரையும் செய்முறை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

 

  1. மார்ச் 3 ஆம் தேதி –  தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
  2. மார்ச் 6 ஆம் தேதி –  ஆங்கிலம்
  3. மார்ச் 11 ஆம் தேதி – கணிதம், உயிரி- விலங்கியல், வணிகம், வேளாண் அறிவியல், நுன்னணுயிரியல், ஊட்டச்சத்து      மற்றும் உணவுமுறை, உணவு சேவை மேலாண்மை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, செவிலியர் (பொது)
  4. மார்ச் 14 ஆம் தேதி – கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் நெறிமுறைகள் மற்றும் இந்தியன் கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி    பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை மின் பொறியியல்
  5. மார்ச் 18 ஆம் தேதி – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திர பொறியியல், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
  6. மார்ச் 21 ஆம் தேதி – வேதியியல், கணக்கியல், புவியியல்
  7.  மார்ச் 25 ஆம் தேதி – இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்புத்திறன்

11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

 

  1.  மார்ச் 5 ஆம் தேதி – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
  2. மார்ட் 10 ஆம் தேதி – ஆங்கிலம் 
  3. மார்ச் 13 ஆம் தேதி –  கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை மின் பொறியியல்
  4. மார்ச் 17 ஆம் தேதி – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணு பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை இயந்திர பொறியியல், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
  5. மார்ச் 20 ஆம் தேதி – இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்புத்திறன்
  6. மார்ச் 24 ஆம் தேதி – கணிதம், உயிரி- விலங்கியல், வணிகம், வேளாண் அறிவியல், நுன்னணுயிரியல், ஊட்டச்சத்து      மற்றும் உணவுமுறை, உணவு சேவை மேலாண்மை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, செவிலியர் (பொது)
  7. மார்ச் 27 ஆம் தேதி – வேதியியல், கணக்கியல், புவியியல்

 

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

 

  1. மார்ச் 28 ஆம் தேதி – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் 
  2. ஏப்ரல் 2 ஆம் தேதி – ஆங்கிலம் 
  3. ஏப்ரல் 4 ஆம் தேதி – விருப்பப்பாடம் 
  4. ஏப்ரல் 7 ஆம் தேதி – கணிதம் 
  5. ஏப்ரல் 11 ஆம் தேதி – அறிவியல் 
  6. ஏப்ரல் 15 ஆம் தேதி – சமூக அறிவியல்

Latest News