SSLC 10th Result : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
TN 10th Result : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தப்படியே அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்த 9.38 லட்சம் பேர் எழுதினர்.இதனை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனால், மாணவர்கள் தங்களது பொதுத்தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 91.55% தேர்ச்சி அடைந்துள்ளனர். 94.53% மாணவிகளும், 88.58% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்
தேர்வு முடிவுகளை எந்த இணையத்தில் பார்ப்பது?
எனவே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தப்படியே அறிந்து கொள்ளலாம்.
எனவே, 10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். அதன்படி, https://tnresults.nic.in/, https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
ரிசல்ட் பார்ப்பது எப்படி?
https://tnresults.nic.in/, https://www.dge.tn.gov.in/ என்ற இணையதள லிக்கை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில், TN SSLC Result 2024 என்றதை க்ளிக் செய்தவுடன் Login காட்டப்படும்.
அதில், உங்கள் தேர்வு எண், பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
உங்கள் தேர்வு முடிவுகள் தெரிந்தவுடன் அதை ப்ரிண்ட் செய்து கொள்ளலாம்.