TN SSLC Supplementary Result 2024: வெளியானது 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது?
இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அறிவியல் நடைமுறைத் தேர்வு உட்பட ஜூலை 2 முதல் 8 வரை துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டது. 10 ஆம் வகுப்பு ஆண்டு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, மே 10 அன்று வெளியான இந்த ஆண்டுத் தேர்வில் மொத்தம் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (TNDGE) 2024ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு துணை தேர்வு முடிவுகளை இன்று, வெளியாகும் என அறிவித்திருந்தது. தேர்வெழுதிய மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ இணையதளமான dge.tn.gov.in -ல் தங்கள் முடிவுகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அறிவியல் நடைமுறைத் தேர்வு உட்பட ஜூலை 2 முதல் 8 வரை துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டது. 10 ஆம் வகுப்பு ஆண்டு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, மே 10 அன்று வெளியான இந்த ஆண்டுத் தேர்வில் மொத்தம் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 10 ஆம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற 9.10 லட்சம் மாணவர்களில் சுமார் 8.18 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.53 சதவீத தேர்ச்சியும், மாணவர்கள் 88.58 சதவீத தேர்ச்சியும் பெற்றனர். அதாவது மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம் பெற்றனர்.
மேலும் படிக்க: ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம்.. கெத்துகாட்டிய மனு – சரப்ஜோத் ஜோடி!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4,57,525 மாணவர்கள், 4,52,498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாகின. இந்நிலையில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத அல்லது தேர்வுக்கு வர முடியாத மாணவர்கள் துணைத் தேர்வை எழுதினர். அவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நீலகிரி கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. எங்கெல்லாம் கனமழை இருக்கும்?
துணைத் தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
தேர்வர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையத்தளம் மூலம் முடிவுகளை பார்க்கலாம். இந்த இணையத்தளத்தில், RESULT என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும், பின்னர் அதில் Supplementary Exam, Jun / Jul 2024 – Result – Statement Of Marks Download க்ளிக் செய்யவும். அதில் உங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.