பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை.. விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ! - Tamil News | | TV9 Tamil

பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை.. விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை.. விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!
Updated On: 

07 May 2024 08:13 AM

பொறியியல் கலந்தாய்வு:

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், இளநிலைப் படிப்புகளில் மட்டும் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவவை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையவழியில் நடைபெறுகிறது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் நேற்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் சுமார் 7.19 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை அட்டவணையை பொறியில் சேர்க்கை குழு தலைவர் வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ, பி.டெக், பி.ஆர்க், பட்டப்படிப்புகளில் சேர, நேற்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள்:

12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு அட்மிட் கார்டு, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை விண்ணப்பிப்தற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read : +2 மதிப்பெண்ணில் சந்தேகமா? மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..எப்படி?

விண்ணப்பிப்பதற்கான இணையதளம்:

https://www.tneaonline.org/அல்லது http://www.dte.gov.inஎன்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

ஓ.சி, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, நெட் பேங்க்கிங் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். மேலும், TNEA Payable at Chennai என்ற பெயரில் வரைவோலை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் வாயிலாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய தேதிகள்:

அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இறுதி நாளாக ஜூன் 12ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம வாய்ப்பு எண் ஜூன் 12ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரிபார்க்கும பணி ஜூன் 13ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Also Read : நாளை 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?

பொதுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் வெளியான பிறகு, அரசுப் பள்ளியில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய் தொடங்கும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு குழுவினருக்கு சிறப்பு ஒதுக்கீட்டில் கீழ் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் வைட்டமின் டி குறைபாட்டை கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
முகச்சுருக்கம் இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..
சூப்பர் ஹிட் சீரியல்களின் டாப் 10 லிஸ்ட் இதோ!
நடிகர் டெல்லி கணேஷ் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!