5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது? குரூப் வாரியாக வெளியீடு.. தேர்வர்களே நோட் பண்ணுங்க!

TNPSC 2025 Annual Planner: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என தேர்வு விவரங்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது? குரூப் வாரியாக வெளியீடு.. தேர்வர்களே நோட் பண்ணுங்க!
டிஎன்பிஎஸ்சி தேர்வு (picture credit: Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Oct 2024 16:10 PM

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3 என தேர்வு விவரங்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வு ஜூன் 15ஆம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த அறிவிப்புகள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I ஜூன் 15ஆம் தேதி நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது?

ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வு நான்கு நாட்கள் நடைபெறும். ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் ) ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வு 7 நாட்கள் நடைபெறும். ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறுகிறது.

Also Read: அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறபோகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

இத்தேர்வுஇத்தேர்வு 5 நாட்கள் நடைபெறும். ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (VA பணிகள்) டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கு அறிவுரை:

தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்  தெரிவித்துள்ளது. மேலும்,  ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.

தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது. அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என நான்கு வகைகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று குரூப் 4 தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது. குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை 2வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “நொறுங்கிவிட்டேன்” முரசொலி செல்வம் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் வேதனை.. அரைக் கம்பத்தில் பறக்கும் திமுக கொடி!

கடந்த ஜூன் மாதம் 6244 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் 11 ஆம் தேதி கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது 2.208 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Latest News