TNPSC Exam: குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியிருக்கீங்களா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க! - Tamil News | tnpsc group 2 answer key out at tnpsc government link check the details to download in tamil | TV9 Tamil

TNPSC Exam: குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியிருக்கீங்களா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க!

Published: 

24 Sep 2024 16:31 PM

TNPSC Group 2 Exam Answer Key: குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விடைக்குறிப்பில் தவறான விடைகள் இருந்தால் தேர்வர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முறையிடலாம் என்று அறிவித்துள்ளது.

TNPSC Exam: குரூப் 2, 2ஏ தேர்வு எழுதியிருக்கீங்களா? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உடனே பாருங்க!

மாணவர்கள் (picture credit: Getty)

Follow Us On

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விடைக்குறிப்பில் தவறான விடைகள் இருந்தால் தேர்வர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முறையிடலாம் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப் 2ஏ பதவிகளில் 1,820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு:

இந்த காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டு குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறற்றது. தமிழகத்தில் 2,763 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

Also Read: டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்.. விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு செய்ய முடிவு..!

இதற்கு 7,93,966  விண்ணப்பித்திருந்த நிலையில், முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்திலும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகடந்த 14.09.2024  நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொதுஅறிவுக்கான உத்தேச விடைகள் (Tentative Key) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள், அதாவது 30.09.2024 மாலை 5.45-க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) வழங்கப்பட்டுள்ளன.

காண்பது எப்படி?

அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயில் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி இணையத்தில் மாதிரி வினாத் தாள் பதிவேற்றப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகள் சரியான விடை டிக் குறியீடு மூலம் காட்டப்பட்டிருக்கும்.  இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் வரும் 29ஆம் தேதிக்குள் டிஎன்பிஎஸ் இணையத்தில் தெரிவிக்க வேண்டும்.

Also Read: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

மேலும், மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளை அதன் வரிசை எண் அடிப்படையிலேயே தேர்வர்கள் தங்கள் மறுப்பை தெரிவிக்க வேண்டும்.  இதனை செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் இணைய வழியில் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version