5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Group 4 Answer Key: குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வெளியானது விடைக் குறிப்பு!

Group 4 Answer Key 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை (ஆன்சர் கீ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. https://tnp sc.gov.in/english/answerkeys.aspx என்ற இணையப் பக்கத்தில் விடைக் குறிப்புகள் குறித்து அறியலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய பெரும்பாலானோர், பொது தமிழ் சற்று எளிமையாக இருந்தது என்றும் இலக்கணப் பகுதி, பொது அறிவு சார்ந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்றும் தெரிவித்தனர்.

Group 4 Answer Key: குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வெளியானது விடைக் குறிப்பு!
குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 19 Jun 2024 13:10 PM

குரூப் 4 விடைக் குறிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை (ஆன்சர் கீ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் இத்தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஜூன் 9 ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர். டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. https://tnp sc.gov.in/english/answerkeys.aspx என்ற இணையப் பக்கத்தில் விடைக் குறிப்புகள் குறித்து அறியலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இந்த தேர்வுகள் மூலமே நிரப்பப்படுகிறது. இதற்கு லட்சக்கணக்கானவர் ஆண்டுதோறும் விண்ணப்பித்து தேர்வு எழுதுவார்கள். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, தட்டச்சர், பில் கலெக்டர், இளநிலை உதவியாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.

Also Read: சவுதியில் நிலவும் கடுமையான வெப்பநிலை.. ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழப்பு..!

2024 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 6,244 காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையே ஜூன் 9 ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.

தேர்வு எழுதிய பெரும்பாலானோர், பொது தமிழ் சற்று எளிமையாக இருந்தது என்றும் இலக்கணப் பகுதி, பொது அறிவு சார்ந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆன்சர் கீ முடிவுகளில் மாணவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஜூன் 25 ஆம் தேதி வரை இணையத்தளம் மூலமாக தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read:  40 வயதுக்கு மேல் கர்ப்பம் சாத்தியமா? ஆரோக்கியத்தில் கவனிக்க வேண்டியவை என்ன?