TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்.. விடைத்தாள்கள் தனித்தனியே மதிப்பீடு செய்ய முடிவு..!
TNPSC Main Exam: டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வுகளில் விடைத்தாள்களை திருத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும், இதில் குளறுபடி ஏற்படுவதாகவும் தேர்வாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இனி வரும் தேர்வுகள் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காக விடைத்தாள்களை திருத்தம் செய்யும் முறையில் புதிய முறையை அறிமுக செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு புதிய மென்பொருள் மூலம் விடைத்தாள் திருத்தம் செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு எடுத்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம் கொண்டு வர டிஎன்பிஎஸ்சி முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அரசு அலுவகத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே. பிரபாகரரை நியமனம் செய்தது. இவரை நியமனத்தை தொடர்ந்து முதன்மை தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய மாற்றம் கொண்டு வர டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
ALSO READ: Court Jobs: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
புதிய முடிவு ஏன்..?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகபடியான போட்டி தேர்வுகளை நடத்தி அரசு அலுவலகங்களில் ஆட்களை நியமித்து வருகிறது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வுகள் Prelims (முதல்நிலை) தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெறும் தேர்வாளர்கள் மெயின்ஸ் என்று அழைக்கப்படும் முதன்மை தேர்வுக்கு தகுதிபெற்று, அத்தேர்வில் பங்கேற்பார்கள்.
Prelims என்று அழைக்கப்படும் முதல்நிலை தேர்வுகளுக்கான பதில்கள் ஓ.எம்.ஆர் தாள்களில் தேர்வாளர்கள் நிரப்புவார்கள். அதன்பிறகு, இதில் தேர்ச்சி பெறும் தேர்வாளர்கள் முதன்மை தேர்வில் விரிவாக விடையளித்து போட்டி தேர்வில் பங்கேற்பார்கள். இப்படியான சூழ்நிலையில், இந்த முதன்மை தேர்வுகளில் விடைத்தாள்களை திருத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும், இதில் குளறுபடி ஏற்படுவதாகவும் தேர்வாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இனி வரும் தேர்வுகள் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காக விடைத்தாள்களை திருத்தம் செய்யும் முறையில் புதிய முறையை அறிமுக செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு புதிய மென்பொருள் மூலம் விடைத்தாள் திருத்தம் செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு எடுத்துள்ளது.
புதிய மென்பொருள் என்ன செய்யும்..?
விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள மென்பொருளில் தேர்வர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்படும். மேலும், இது பாடவாரியாக தேர்வர்கள் அளித்துள்ள பதில்களை தனித்தனியே பிரித்தெடுக்கும். இந்த மென்பொருள் உதவியுடன் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வாளர்களின் விடைத்தாள் வழங்கப்படும். இதையடுத்து, அந்த ஆசிரியர்கள் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்பி வெளியிடும் விடையுடன் ஒப்பிட்டு இறுதி மதிப்பெண்ணை வழங்குவார்கள்.
ALSO READ: Chennai Jobs: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. சென்னையில் சூப்பரான வேலை.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
கண்காணிப்பு:
மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஜிஐஎஸ் என்று அழைக்கப்படும் புவி தகவல் அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். மேலும், இந்த புதிய நடைமுறை வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குரூப் 2 முதன்மை தேர்வில் இருந்து அமல்படுத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடியாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது. தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்படும் காலி பணியிடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளை ஒப்பிடுகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் முறையே 9351, 6491 மற்றும் 7301, தேர்வுகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படுகையில் முறையே 11949, 9684 மற்றும் 10139 அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டை பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருந்த என 6244 61601 காலிப்பணியிடங்கள் தற்பொழுது 6724 என அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மேலும் அதிகரிக்கும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.