School Leave: கனமழை.. திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக  திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். நேற்று இரவு முதலே திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

School Leave: கனமழை.. திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை!

மழை (picture credit: PTI)

Updated On: 

08 Nov 2024 08:22 AM

கனமழை காரணமாக  திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். நேற்று இரவு முதலே திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்க பருவமழை தொடங்கியது. தொடக்கம் முதலே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இயல்பை விட கூடுதலாக 12 சதவீதம் பெய்துள்ளது.

திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இதன்பிறகு காலை வெயில், மாலையில் மழை என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக, தீபாவளி நாளில் கூட சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில், நேற்று இரவு முதலே திருவாரூர், கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

Also Read : தென் மாவட்டங்களில் பிச்சு உதறபோகுது மழை.. வானிலை மையம் அலர்ட்!

இன்று 13 மாவட்டங்களுக்கு அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை (நவம்பர் 9) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 10ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 11ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Also Read : ”திருச்சி சூர்யாவிற்கு பாதுகாப்பு வழங்க தேவையில்லை” – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்..

வரும் 12 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான- கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!