School Leave: ரெட் அலர்ட்… நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Tamilnadu Red Alert: ரெட் அலர்ட் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. குறைவான காலமே மீதி உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதுவரை பற்றாக்குறை அளவே மழை பெய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும் என பல மாதங்களுக்கு முன்னரே வானிலை நிபுணர்கள் கூறினர். ஆனால், அதுபோல மழை பொழிவு இல்லை. நவம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
அதற்கேற்ப, காவரி, டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் பரவமாக மழை பெய்தது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. கடந்த நில நாட்களாகே டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் குநைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது படிப்படியாக வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கியது. நேற்று தீவிர தாழ்வுநிலையாக மாறியது.
Also Read : டிசம்பர் 9ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்.. எதிர்க்கட்சிகளின் பிளான் என்ன?
3 நாட்களுக்கு ரெட் அலர்ட்
இன்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து 880 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 1050 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 தினங்களில் தமிழக-இலங்கை கடற்கரையை நெருங்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 26ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். வரும் 27ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.
Also Read : “ராமதாஸ் பற்றி அப்படி பேசுவதா”.. முதல்வர் ஸ்டாலினுக்கு வலுக்கும் கண்டனங்கள்..
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
அதேபோல, 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்லம் தமிழகத்தை நெருங்கி வருவதால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால், ஆழ்கடலுக்குள் சென்ற மீனவர்கள் திரும்பி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கனமழை அக்டோபர் 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அதற்கு பிறகு மழையின் தாக்கம் குறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.