School Leave: கனமழை எதிரொலி.. 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெங்கு தெரியுமா?
பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (நவம்பர் 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. மேலும், நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் அதற்கு முன்னரே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதன் காரணமாக அக்டோபர் 14ஆம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. அதன்பிறகு மழை சரியாக பெய்யவில்லை. சிறிது நாட்கள் கழித்து வங்கக் கடலில் புதிய புயல் உருவானது. இது ஒடிசாவை நோக்கி சென்றுவிட்டது.
அதனால் தமிழகத்தில் மழை இல்லை. இப்படியே அக்டோபர் கழிந்துவிட்டது. ஆனால் காற்றின் சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் மட்டுமே அவ்வப்போது மழை பெய்தது. அந்த வகையில், கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நவம்பர் மாதம் முற்பகுதியில் ஏற்பட்ட காற்றின் சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பின்னர் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக் கனமழை பெய்தது. இந்த நிலையல், வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 24ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இது வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர தொடங்கி, நேற்று முன்தினம் தீவிர தாழ்வுநிலையாக மாறியது. நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தற்போதைய நிலவரப்படி, இன்று காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலக்கை – திரிகோணமலையில் இருந்து தென்கிழக்கே சுமார் 310 கி.மு தொலைவிலும், நாகப்பட்டினத்தில் தெற்கு – தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 710 கி.மீமு தொலைவிலும், சென்னையில் தென் கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
Also Read : ஃபெங்கல் புயல் எங்கே இருக்கிறது? கரையை கடக்கும் பகுதி எது? வானிலை விவரம்!
நாளை உருவாகும் ஃபெங்கல் புயல்
இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு தான் ’ஃபெங்கல்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இன்று முதல் 29ஆம் தேதி வரை மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை மிக மிக பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 20 செ.மீ மேலும் மழை கொட்டும்.
இப்போதே புயல் சின்னத்தை சுற்றியுள்ள மேகக் கூட்டம் காரணமாக தமிழ்நாட்டில் மப்பும்மந்தாரமுமாக உள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், இன்று கனமழை கொட்டியது. மழையின் பாதிப்பை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Also Read : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!
அதன்படி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இது தவிர தேவைக்கேற்ப சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பும் வகையில், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.