5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TRB Exam: இடைநிலை ஆசிரியர் தேர்வு.. 2,768 காலிப்பணியிடங்கள்.. 26 ஆயிரம் தேர்வர்கள்.. முழு விவரம்..

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. முதலில் இந்த தேர்வு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை 21 ஆம் தேதி இந்த தேர்வு நடக்கும் என அறிவிப்பு வெளியானது.

TRB Exam: இடைநிலை ஆசிரியர் தேர்வு.. 2,768 காலிப்பணியிடங்கள்.. 26 ஆயிரம் தேர்வர்கள்.. முழு விவரம்..
மாதிரி புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 21 Jul 2024 10:03 AM

இடைநிலை ஆசிரியர் தேர்வு: 2,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித்தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. சுமார் காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வை தமிழ்நாடு முழுவதும் 26 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 5 மையங்களில் 1,292 பேர் எழுதுகின்றனர். ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1ல் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தேர்வு இன்று காலை 9.30-12.30 வரை நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. முதலில் இந்த தேர்வு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை 21 ஆம் தேதி இந்த தேர்வு நடக்கும் என அறிவிப்பு வெளியானது.

இதனடைப்படியில் இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது. அவ்வாறு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டது. ஜூலை 2 ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் தங்களது user id மற்றும் password பயன்படுத்தி தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பித்துள்ள இந்த இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்குத் தேர்வு மையங்களுக்குக் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தேர்வர்கள் அனைவரும் தீவிரப் பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணிக்குப் பின்னர் வரும் தேர்வர்கள் எவரும் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் படிக்க: தினசரி தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இத்தனை விஷயங்கள் உள்ளதா?

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாமல் எந்த தேர்வரும் தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹால் டிக்கெட் உடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், பான் கார்டு போன்ற அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும். தேர்வர்கள் கைப்பேசி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களைத் தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பெல்ட், நகைகள், ஷூ, ஹீல்ஸ் ஆகியவை அணிந்து வரக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு எழுதத் தடை விதிக்கப்படும் என ஆசிரியர் தகுதி வாரியம் தெரிவித்துள்ளது. போட்டி எழுத்துத் தேர்வில் தகுதி ஒன்றில், தமிழ் மொழி தாள் தேர்வில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட உள்ளது. அதில் தேர்வர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். பகுதி 2 ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, உருது, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கலவர பூமியான வங்கதேசம்.. கண்டதும் சுட உத்தரவிட்ட அரசு..

Latest News