5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TRUST Exam 2024: மாதம் ரூ.1000 உதவித்தொகை.. 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தத் திட்டத்தின் கீழ் தலா 50 மாணவ, மாணவியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 வருடங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ஊரக பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

TRUST Exam 2024: மாதம் ரூ.1000 உதவித்தொகை.. 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Nov 2024 09:46 AM

ஊரக திறனாய்வு தேர்வு: மத்திய மாநில அரசுகள் கல்வியை மேம்படுத்தும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு குறிப்பிட்ட வகுப்பினருக்கும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் வண்ணம் திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 14ஆம் தேதி கல்வி உதவி தொகை காண ஊரக திறனாய்வு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தகுதியுள்ள மாணவர்கள் நவம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வு தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் லதா, சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு திட்டம் அமலில் இருந்து வருகிறது. இதன் கீழ் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளை பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுத தகுதி உடையவர்களாவர்.

இந்தத் திட்டத்தின் கீழ் தலா 50 மாணவ, மாணவியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 வருடங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை ஊரக பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. அரசு தரும் மாதம் ரூ.5,000… தகுதிகள் என்ன?

மேலும் நடப்பாண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்பின் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகங்களில் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் பள்ளி அமைந்துள்ள பகுதியிலேயே திறனாய்வு தேர்வுக்கான மையம் அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: School Leave: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – எங்கெல்லாம் தெரியுமா?

இந்த ஊரக திறனாய்வு தேர்வை நகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் வருமானச் சான்றிதழையும் இணைக்க வேண்டும். திறனாய்வு தேர்வு அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 50 மாணவர்களும், 50 மாணவிகளும் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் எந்த தேர்வானது நடப்பாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் எல்லாம் சமர்ப்பித்த பிறகு மாணவர்களுக்கு தேர்வுக்கு முன்பதாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும்படி அறிவுறுத்தப்படும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரை ஆகியவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் ஹால் டிக்கெட்டில் தேர்வு தேதி, தேர்வு மையம், தேர்வு நேரம் ஆகிய விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை அதில் ஏதும் பிழை இருந்தால் சிவப்பு நிறம் அமையால் அளித்து சரியான திருத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News