UGC NET Exam 2024: யுஜிசி நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு.. புதிய அட்டவணை வெளியிட்ட என்டிஏ!

கடந்த 18ஆம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

UGC NET Exam 2024: யுஜிசி நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு.. புதிய அட்டவணை வெளியிட்ட என்டிஏ!

நெட் தேர்வு

Published: 

29 Jun 2024 16:21 PM

யுஜிசி நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு: யுஜிசி நெட் தேர்வுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர நெட் தேர்வு எனும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதேபோல, இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகையை பெற நெட் தேர்வு கட்டாயம் ஆகும். மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணிணி மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தகுதித் தேர்வு ஜூன் மற்றும டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது.


இந்த தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். நடப்பாண்டுக்கான நேரடி எழுத்துத்தேர்வு முறை கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் 317 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,205 தேர்வு மையங்களில் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. இதில், 9.08 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

Also Read: நீட் மறுதேர்வை எழுதாத 750 மாணவர்கள்.. அதிர்ச்சி கொடுத்த தேசிய தேர்வு முகமை!

மறுதேர்வு தேதி என்ன?

இந்த நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, கடந்த 18ஆம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை கணினி மூலம் நடைபெறும எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிஐஎஸ்ஆர் யுஜிசி நெட் தேர்வு ஜூலை 245 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்சிஈடி தேர்வு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு திட்டமிட்டப்படி ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என புதிய கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறு தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?