5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. எப்போது தெரியுமா?

UGC NET Exam: நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. எப்போது தெரியுமா?
நெட் தேர்வு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 12 May 2024 13:45 PM

நெட் தேர்வு:

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர நெட் தேர்வு எனும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதேபோல, இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகையை பெற நெட் தேர்வு கட்டாயம் ஆகும். மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணிணி மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தகுதித் தேர்வு ஜூன் மற்றும டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

நெட் தேர்வு 2024:

2024ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதித் தேர்வு ஜூன் 16ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஜன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளது. அதாவது, மே 15ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். மே 20ஆம் தேதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.

Also Read : 5 ஆண்டு சட்டப்படிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? முக்கிய தேதிகள் இதோ!

விண்ணப்பிப்பது எப்படி?

  • தேர்வர்கள் https://ugcnet.nta.ac.in/ அல்லது https://ugcnet.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில் UGC NET JUNE 2024 Registration Open-Click Here என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
  • புதிதாக ஒரு பக்கம் தோன்றும். அதில், பதிவு செய்து கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்யவும்.
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பிறகு விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்பு, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கான விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1,150, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவனர்/ஓபிசி (க்ரீம்லேயர் அல்லாதோருக்கு) ரூ.600, எஸ்சி/எஸ்டி பிரிவினர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.325 என வழங்கப்படுகிறது.

Also Read : மே 14ஆம் தேதி வெளியாகிறது +1 பொதுத்தேர்வு ரிசல்ட்.. பார்ப்பது எப்படி?

Latest News