5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

UGC NET Exam: 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.. காரணம் என்ன?

நாடு முழுவதும் 9 லட்சத்துக்கு அதிகமானோர் கடந்த 18ஆம் தேதி எழுதிய தேசிய தகுதித் தேர்வு (NET) ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடத்திருப்பதாக இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வு பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது.நடப்பாண்டுக்கான நேரடி எழுத்துத்தேர்வு முறை கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் 317 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,205 தேர்வு மையங்களில் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. இதில், 9.08 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வு பிரிவு அளித்த தகவலின்பேரில் நெட் தேர்வில் முறைகேடு நடத்திருக்க வாய்ப்பிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

UGC NET Exam: 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து… மத்திய அரசு அறிவிப்பு.. காரணம் என்ன?
நெட் தேர்வு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 20 Jun 2024 10:42 AM

நெட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் 9 லட்சத்துக்கு அதிகமானோர் கடந்த 18ஆம் தேதி எழுதிய தேசிய தகுதித் தேர்வு (NET) ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடத்திருப்பதாக இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வு பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர நெட் தேர்வு எனும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதேபோல, இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகையை பெற நெட் தேர்வு கட்டாயம் ஆகும். மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணிணி மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தகுதித் தேர்வு ஜூன் மற்றும டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

நடப்பாண்டுக்கான நேரடி எழுத்துத்தேர்வு முறை கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் 317 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,205 தேர்வு மையங்களில் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. இதில், 9.08 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வு பிரிவு அளித்த தகவலின்பேரில் நெட் தேர்வில் முறைகேடு நடத்திருக்க வாய்ப்பிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


எனவே, ஜூன் 18ஆம் தேதி நடத்தப்பட்ட நெட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இத்தேர்வு புதிதாக மீண்டும நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். அதே வேளையில், தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: மலையில் கார் ஓட்ட பயிற்சி.. 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்.. ஷாக் வீடியோ