5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vinesh Phogat: ஹரியானா தேர்தல்.. ஒருவழியாக வெற்றி… அரசியலில் சாதித்த வினேஷ் போகத்!

ஹரியானா வினேஷ் போகத்: ஹரியானா வினேஷ் போகத்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பெரிதும் கவனம் பெற்றவர் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத். இவர்  காங்கிரஸ் சார்பில்  சாரபில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில், ஜுலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். அதாவது, 65,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் வினேஷ் போகத்.

Vinesh Phogat: ஹரியானா தேர்தல்.. ஒருவழியாக வெற்றி… அரசியலில் சாதித்த வினேஷ் போகத்!
வினேஷ் போகத் (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 08 Oct 2024 14:16 PM

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, தற்போது பாஜக 51 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது பாஜக பெரும்பான்மையை பெற்ற நிலையில், இது காங்கிரஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  கிட்டதட்ட ஹரியானாவில் பாஜக மூன்றாவது ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது.  ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பெரிதும் கவனம் பெற்றவர் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத். இவர்  காங்கிரஸ் சார்பில்  சாரபில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்டார்.

வினேஷ் போகத் வெற்றி?

90 தொகுதிகளை கொண்ட ட ஹரியானாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 89 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் போட்டியிட்டனர். ஜனநாயக ஜனதாக கட்சி 66 இடங்களிலும், ஆசாத் சமாஜ் கட்சி 12 இடங்களிலும் போட்டியிட்டனர்.

மேலும், ஆம் ஆத்மி 88 இடங்களிலும் போட்டியிட்டனர். 90 தொகுதிகளில் 464 சுயேச்சைகள் மற்றும் 101 பெண்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இதில் பெரிதும் கவனம் பெற்றவர் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத். இவர்  காங்கிரஸ் சார்பில்  சாரபில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்டார்.

Also Read: காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்.. 2 இடங்களில் உமர் அப்துல்லா முன்னிலை!

இவருக்கு எதிராக பாஜக சார்பில் யோகேஷ் குமார் களம் இறக்கப்பட்டார். அதே சமயம், ஆம் ஆத்மி சார்பில் மற்றொரு வீராங்கனை கவிதா தலால் போட்டியிட்டார். இந்த நிலையில் வினேஷ் போகத்  வெற்றி பெற்றுள்ளார்.  வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே யோகேஷ் குமாருக்கும் வினேஷ் போகத்துக்கும் கடும் போட்டி நிலவியது. முன்னிலை, பின்னடைவு என மாறி மாறி வந்த சூழலில்,  மல்யுத்த களத்தை போலவே வினேஷ்  போகத் போராடி வெற்றி பெற்றுள்ளார்.

அதாவது, 65,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் வினேஷ் போகத். பாஜக வேட்பளாரை விட சுமார் 6,061 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், பாஜக வேட்பாளர் யோகேஷ் பைராகி  59,065 பெற்று தோல்வி அடைந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கவிதா ராணி 1,280 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

யார் இந்த வினேஷ் போகத்?

இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில்தான் வினேஷ் போகத் முதன்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகமானார். ரியோ ஒலிம்பிக்கில் முழங்கால் காயம் காரணமாக வினேஷ் போகத் பாதியில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ரியோ ஒலிம்பிக் காயத்திற்குப் பிறகு வினேஷின் கேரியர் முடிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனாலும் மனம் தளராத வினேஷ், மீண்டும் டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கி 16வது சுற்றுடன் வெளியேறினார். அதன்பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட பல முக்கிய வீரர், வீராங்கனைகள் நடுரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டம், காயம் என போராடிய வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டி வரை சென்றார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு முன் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது வினேஷ் போகத் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கு அதிர்ச்சியை தந்தது. விதிகளின்படி, வினேஷ் போகத்தின் எடை 50 கிலோக்குள் இருக்க வேண்டும்.

Also Read: ஜம்மு காஷ்மீரில் வெல்லப்போவது யார்? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

ஆனால், 50 கிலோ 100 கிராம் இருந்ததால் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்தனர். மேலும், இனி போராட எனக்கு சக்தி இல்லை என்று கூறி மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக கூறி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இதனிடையே தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹரியானாவில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார்.

Latest News